Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

DMDK: "ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக-வுடன் மனவருத்தமா?" – பிரேமலதா விஜயகாந்த் பளீர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2025
in அரசியல் செய்திகள்
0
DMDK: "ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக-வுடன் மனவருத்தமா?" – பிரேமலதா விஜயகாந்த் பளீர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தவம் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளாரே?” என்ற கேள்விக்கு, “அவர்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. இப்போது தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர் பிரச்னை என இந்த மூன்றும்தான் முக்கிய பிரச்னையாக உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நம் தாய்மொழியான தமிழானது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்பதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு. அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்த்தின் வார்த்தை. அதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு.

பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைப்பதாகக் கருத்து உள்ளது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை 40 எம்.பி., தொகுதிகளைக் குறைக்கின்ற வேலையில் மத்திய அரசு ஈடுபட்டால் உறுதியாகத் தமிழக அரசுடன் சேர்ந்து தமிழகத்திற்காகப் போராட உறுதியாக இருக்கிறோம்.

மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மிகவும் மனவேதனையாக இதைப் பதிவு செய்கிறேன். அவர்களின் வாழ்வாதாரம் கடலை நம்பித்தான் உள்ளது. இலங்கை கடற்படையினரால் தினந்தோறும் தாக்கப்படுவதையும், உடைமைகள் திருடப்படுவதையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதையும், கைது செய்யப்படுவதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும். நமது பிரதமர் இலங்கைக்குச் செல்லும்போது இனிவரும் காலங்களில் மீனவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க உறுதியாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். நாம் அதனை விட்டுக் கொடுத்ததிலிருந்துதான் மீனவர்கள் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

தேர்தல் வியூக ஆலோசகர்

“கட்சிகள் தேர்தல் வியூக ஆலோசகர்களை நியமிக்கிறதே” என்ற கேள்விக்கு, “அது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு. ஒரு ஆலோசகர் வைப்பதால் நூறு சதவிகிதம் வெற்றி கிடைக்குமா என்று சொல்ல முடியாது. அது அந்த கட்சியின் வியூகம். கேப்டனை பொறுத்த வரை எப்போது மக்களை மட்டும்தான் நம்பினார். ஒரு ஆலோசகர் மூலம்தான் வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த ஆலோசகர் போட்டியிட்ட மாநிலத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் கேள்வி? அந்தந்த கட்சித் தலைவர்கள் எடுக்கிற நிலைப்பாடு குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.”

பிரேமலதா விஜயகாந்த்

“2026-ல் அ.தி.மு.க-தே.மு.தி.க-பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு, “இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது நிச்சயமாக அதற்கான அறிவிப்புகள் வரும்” என்றார்.

“ராஜ்யசபா சீட் விஷயத்தில் அ.தி.மு.க-வுடன் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதா?” என்ற கேள்விக்கு, “அந்த மாதிரி எதுவும் கிடையாது” என்றார்.

’கதைகூட கேட்காம விஜயகாந்த் சாரை கமிட் செய்து கொடுத்தார் வி.நடராஜன் சார்’ – உருகும் ஆர்.வி.உதயகுமார்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



.

Previous Post

தங்கம் விலை நிலவரம்: மீண்டும் உயரும் தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

மத்தியப் பிரதேசத்தில் லாரி – வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்தியப் பிரதேசத்தில் லாரி – வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In