Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29, நவ.5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும்.

இந்த ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

செங்கோட்டை: சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் – கன்னியாகுமரி: தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.28, நவ.4, 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.



.

Previous Post

உடனே அகற்ற மேயா் பிரியா உத்தரவு

Next Post

`போர் வேண்டாம்' என Israel மக்கள் போராட்டம் – நெருக்கடியில் Benjamin Netanyahu

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`போர் வேண்டாம்' என Israel மக்கள் போராட்டம் – நெருக்கடியில் Benjamin Netanyahu

`போர் வேண்டாம்' என Israel மக்கள் போராட்டம் - நெருக்கடியில் Benjamin Netanyahu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In