Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கலர் மாறிய நட்சத்திரங்கள்… களைகட்டும் தேர்தல் களம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 5, 2024
in Default
1
கலர் மாறிய நட்சத்திரங்கள்… களைகட்டும் தேர்தல் களம்!
50
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சினிமாவில் பெயரும் புகழும் சம்பாதித்த பிறகு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியிலோ அல்லது தங்களுக்கு அழைப்பு விடும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தோ களம் காண்பது வழக்கம்.

அதேபோல, கட்சிகளும் சினிமா நட்சத்திரங்களை தங்கள் கட்சியின் வேட்பாளராகவோ அல்லது பிரச்சார பீரங்கிகளாகவோ கட்சியில் இணைப்பதுண்டு. இதன் மூலம், அந்தக் கட்சி மக்கள் மத்தியில் அதிகம் போய்ச்சேர்வதுடன், நட்சத்திரங்களுக்காக வாக்கு வங்கி திசை மாறிய கதைகளும் உண்டு. அப்படி இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி மாறிய பிரபலங்கள், அரசியல் களத்தில் காணாமல் போன நட்சத்திரங்கள் யார் யார் என்பது பற்றி இங்குப் பார்க்கலாம்.

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினையில் தனக்கு பாஜக சார்பில் யாரும் உதவில்லை எனவும் கடுமையாக உழைத்தும் தனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டி பாஜகவுக்கு பை சொன்ன கவுதமி இப்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அரசியலில் இவருக்கு சீனியரான நடிகை விந்தியா தனது வழக்கமான பாணியில் பாஜகவையும் திமுகவையும் போட்டுத்தாக்கி வருகிறார்.

முன்னதாக, பெண்களை பாஜக சரியாக நடத்தவில்லை என்று சொல்லி நடிகை காயத்ரி ரகுராமும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சமீபத்தில் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கச் சென்றபோது, அங்கு ஒருவர் காயத்ரியிடம் தாமரையைக் கொடுத்து கேலி செய்த சம்பவமும் நடந்தது.

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை காயத்ரி ரகுராம்

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை காயத்ரி ரகுராம்

அதேபோல, அதிமுகவில் பரபரப்பாக இருந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷூம் பாஜகவுக்குத் தாவினர். இந்தத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் களமிறங்கிய நிலையில், பிரச்சாரம் குறித்து ஆர்த்தியிடம் பேசினோம். “பிரச்சாரத்திற்கு அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதுகுறித்து நானும் என் கணவரும் இன்னும் முடிவு செய்யவில்லை. மற்றபடி, பாஜக வெற்றிக்கான பணிகளை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

அதுபோலவே அதிமுக, அமமுக கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த நடிகர் செந்தில் இப்போது பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார். இவர்கள் ஆக்டிவாக இருக்கும் நிலையில், முந்தைய தேர்தல்களில் பரபரப்பாக இருந்த நட்சத்திரங்கள் கங்கை அமரன், கலா மாஸ்டர் போன்றோர் இந்தத் தேர்தலில் அமைதி காப்பதன் பின்னணி பணிச்சுமையா அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவில்லை.

Previous Post

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: பாஜக நிர்வாகி கைது செய்து விசாரணை..

Next Post

காங். தேர்தல் அறிக்கை இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது -பிரதமா் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங். தேர்தல் அறிக்கை இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது -பிரதமா் விமர்சனம்

காங். தேர்தல் அறிக்கை இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது -பிரதமா் விமர்சனம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த நடிகைகள் சினிமா துறையில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அதாவது அரசியலுக்கு ஒதுங்கியவர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In