Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 7, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு.!
48
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு வரும் நிலையில் 12வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த நவம்பர் 15-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு, செந்தில் பாலாஜிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி அவரது பித்தப்பையில் கொழுப்புச் சத்து சேர்ந்து கற்களாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானது.

இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அவர் இன்று காலை 6.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது,  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

துக்ளக் ஆசிரியரும் , அரசியல் விமர்சகருமான “சோ” ராமசாமி மறைந்த தினம் இன்று.

Next Post

‘மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை..’ முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை..’ முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து

'மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை..' முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த பத்து ரூபாய் பாலாஜி இருக்க வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறார் எனவே வருத்தப்பட எந்த ஒரு காரணமும் இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In