திருச்சியில் நேற்று (நவம்பர் 19) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
“கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 53 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியிலிருந்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரண வேதனை இருக்கிறது. யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள்? ஒரு 20 சீட் கொடுங்கள்…. ஒரு 50 கோடி கையில் கொடுங்கள். அல்லது ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது?. இப்போது, அ.தி.மு.க-வுக்குதான் மார்க்கெட் போய்க் கொண்டிருக்கிறது.
