Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

விடாமுயற்சி: லண்டனில் இருக்கும் அஜித்; மகிழ் திருமேனி – படப்பிடிப்பு எப்போது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2023
in சினிமா செய்திகள்
0
விடாமுயற்சி: லண்டனில் இருக்கும் அஜித்; மகிழ் திருமேனி – படப்பிடிப்பு எப்போது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஒருவழியாக டேக் ஆப் ஆகப்போகிறது. இம்மாதம் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை:

அஜித்

லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கும் படத்தின் பெயர் ‘விடா முயற்சி.’ சென்ற மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே அஜித் கதையைக் கேட்டு, சில திருத்தங்கள் சொல்லியிருப்பதால், மகிழ் அதற்கான வேலைகளில் உள்ளார், அதனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது என்றும் செய்திகள் வந்தன. இந்நிலையில் புனேயில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும், அங்கே அரங்கம் அமைக்கும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

மகிழ்திருமேனி

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தக் கதையில் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். மெயின் வில்லனாக பக்கத்து மாநிலத்திலிருந்து ஒருவர் வரவிருக்கிறார் என்கிறார்கள். இன்னொரு விஷயம், அஜித்தும், இயக்குநர் மகிழும் இப்போது படத்தின் முன் திட்டமிடல் வேலைகளுக்காக லண்டனில் உள்ளனர் என்றும் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் லண்டனில் பைக் ரைடில் இருந்த அஜித், அங்கே லுக் டெஸ்ட் எடுத்தார் என்பதைச் சொல்லியிருந்தோம்.

அஜித்குமார்

‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கிறது என்றும், இம்மாதம் இரண்டாவது வாரங்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸைக்கூட அனேகமாக வரும் பொங்கல் பண்டிகைக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே ‘இந்தியன் 2’, ‘கங்குவா’ படங்கள் பொங்கலுக்கு வரும் ஐடியாவில் இருப்பதனால் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாகப் படத்தைக் கொண்டு வருகின்றனர்.

.

Previous Post

ஒடிசா ரயில் விபத்து | தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை: உதயநிதி தகவல்

Next Post

கடன் மற்றும் தொழில் நஷ்டம்: தருமபுரி அருகே ஆன்லைனில் தகவல் திரட்டி நூதன முறையில் தாய் – மகன் தற்கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடன் மற்றும் தொழில் நஷ்டம்: தருமபுரி அருகே ஆன்லைனில் தகவல் திரட்டி நூதன முறையில் தாய் - மகன் தற்கொலை

கடன் மற்றும் தொழில் நஷ்டம்: தருமபுரி அருகே ஆன்லைனில் தகவல் திரட்டி நூதன முறையில் தாய் - மகன் தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In