ஒரு நல்ல சிந்தனையாளனை சிறைவாசம் சிதைக்காது செதுக்கி வளர்க்கும்.
என்ற வாசகத்திற்கு ஏற்ப மதுரை மத்திய சிறையில் கடந்த 16 ஆண்டு காலம் தண்டனை பெற்று இல்ல வாசியாக இருந்த சாமுவேல் என்பவர் தனது தண்டனை காலம் முடிந்து சமீபத்தில் விடுதலை ஆனார்.
மதுரை மத்திய சிறையில் இருந்த பொழுது தான் பயிற்சி பெற்ற தையல் தொழிலை சிறையில் பணியாக மேற்கொண்டு வந்த அவர் விடுதலைக்கு பின் அதே தையல் தொழிலை மூலதனமாகக் கொண்டு இன்று புதிய தொழிலை பரமக்குடியில் துவங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மதுரை சரக டிஐஜி திரு. பழனி அவர்கள் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார்.
உடன் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் உடன் இருந்தார். தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலமாக சிறையில் உள்ள சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு ஏற்ப சிறையில் பணிகளும் வழங்கப்பட்டு விடுதலைக்கு பின் அந்த தொழிலை அவர்கள் மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறைத்துறை மூலமே பெற்று வழங்கப்படுகிறது.
மேலும் விடுதலைக்குப் பின்னும் அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட்டு சமுதாயத்தில் இணைவதற்கான நடவடிக்கைகளும் சிறைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


