Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ – வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ் | MLA velmurugan shares his views on current TN assembly

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 11, 2025
in அரசியல் செய்திகள்
0
திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ – வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ் | MLA velmurugan shares his views on current TN assembly
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இப்போது படிக்கக்கூட இல்லை. ஆனால் வந்த உடனே திரும்பத் திரும்ப ஆங்கிலத்தில் சொல்கிறார். தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது தேசிய கீதம் பாட வேண்டும். தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறுகிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டாம், தேசிய கீதம் பாடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு தான் அவருடைய செயல்பாடுகளும் போக்கும் அங்கு இருந்தது.

இதில் இன்னும் ஒன்று பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுவரைக்கும் இருந்த ஆளுநர்களுக்கு இல்லாத வண்ணம், இந்த ஆளுநர் வந்த பிறகு, கோட்டை கொத்தள வாசலில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை தந்து, டிரம் வாசிக்கப்பட்டு அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு காவல்துறையின் டிஜிபி, தலைமைச் செயலாளர், பேரவை செயலாளர், பேரவை தலைவர் என அனைவரும் நின்று அங்கு தேசிய கீதம் வாசிக்கப்பட்டு பின்பு தான், மரபு ரீதியாக சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கப்படுகிறார்.

வாசலில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, தேசிய கீதம் வாசிக்கப்பட்டு பின்பு உள்ளே வந்த பிறகு, ஒரு சில நிமிடங்களிலே திரும்பவும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தி அதை ஏற்றுக் கொள்ளாத போது அவர் வெளியேறுகின்ற அந்த போக்கு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.”

“திமுக முன்கூட்டியே அறிந்து கொண்டார்களா ஆளுநர் வெளியேறப் போகிறார் என்று?”

“ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு இருக்கலாம். என்னை பொறுத்த வரையில், கவர்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையில் மிகுந்த சிரித்த முகத்துடன் காணப்படுகிறார். பேரவை தலைவர் மற்றும் பேரவை செயலாளர் அவர்களிடம் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் பெற்றுக்கொள்கிறார். அந்த நேரடி ஒளிபரப்பை பார்க்கும் பொழுது அவர் சாதாரணமாக வருவது போல தான் வந்தார். உள்ளே வந்த போது, `தமிழ் தாய் வாழ்த்து தான் பாடுவோம் என்று சொன்னேன். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி இன்றைக்கு ஐந்து துணை வேந்தர்களை நியமிக்காமல் இருக்கிறீர்கள். பாஜக வந்த பிறகு தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் இருந்த போதும் அவர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று சிந்தித்து வேறு மாநிலங்களில் இருந்து துணை வேந்தர்களை தமிழகத்தில் நியமிக்கும் அநியாயம் அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி செய்து கொண்டிருக்கின்ற நீங்கள், வேந்தராக இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு பாலியல் வல்லுறவு நடக்கிறது என்றால் காவல்துறை பொறுப்பேற்க வேண்டுமோ, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமா, அதற்கு நிகரான பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது அல்லவா. அதை குறித்து தான் நான் முழக்கங்களை எழுப்பினேன்.



.

Previous Post

ஈரோடு கிழக்கு தேர்தல்! கேப்டனின் தளபதி TO தளபதியின் தம்பி! யார் இந்த விசி.சந்திரகுமார்!

Next Post

TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! இடைத் தேர்தலை புறக்கணிக்கிறதா அதிமுக!’ டாப் 10 நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In