சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோ ஒன்றில், ‘கம்பம் நகருக்குள் வந்த யானை ஓடி வரும்போது மூதாட்டி ஒருவர் சாலையோரத்தில் நின்றிருப்பார். அந்த இடத்தில் நின்று அவரை பார்க்கும் யானை எதுவும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தது. வெறிபிடித்த நாய் தெருக்களில் சுற்றினால் எத்தனை பேரை கடிக்கிறது. அரிசி கொம்பன் உயிர்பலி வாங்கும் விலங்காக இருந்திருந்தால் கம்பம் நகரில் எத்தனை பேரை காவு வாங்கியிருக்கும்’. ஏற்கெனவே, பல கொலை பழிகள் அரிசி கொம்பன்மீது சுமந்தப்பட்டது போல, அரிசி கொம்பன் தாக்கியதில் பால்ராஜ் உயிரிழந்தார் என பழி சுமத்தியிருக்கின்றனர்.
கம்பம் நகரை ஒட்டிய புளியந்தோப்பில் யானை நின்று கொண்டிருந்தது. அப்போதும், யானையின் தலைக்கு அருகாமையில் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுக்க முயன்றதில் தான் இடம்பெயர்ந்து சுருளிபட்டி வழியாக மேகமலை அடிவாரப்பகுதிக்குச்சென்றது. அப்போதும் கூட சுருளிபட்டி மக்களுக்கு எவ்வித இடையூறும் கொடுக்காமல் கடந்து சென்றிருக்கிறது” என்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “கம்பம் நகருக்குள் யானை புகுந்த போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து முதற்கட்டமாக விசாரித்த போது ஆட்டோ ஒன்றை சேதப்படுத்தியதாகவும் பால்ராஜை தாக்கியதாகவும் தகவல் கிடைத்தது. அதன் பிறகு வனத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில் பால்ராஜ் அதிர்ச்சியில் கீழே விழுந்து காயம் அடைந்தது தெரிய வந்தது. இருப்பினும் பால்ராஜ் உயிரிழப்புக்கு யானையும் ஒரு காரணம் என்பதால் அவருக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது” என்றனர்.

