டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம், அதானி ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் போன்ற பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று காலையில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. அப்போது, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், `ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது.” என்று மத்திய அரசை வலியுறுத்தி அரசு தரப்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.