Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.

சென்னை சூப்பா் கிங்க்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே வரும் மே 12-ஆம் தேதி லீக் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி இதுவாகும்.

அகமதாபாத்தில் வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ், மே 12 சென்னையில் ராஜஸ்தானுடனும், மே 18 பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனும் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும்.

மேலும், முதல் இரண்டு ப்ளே-ஆஃப் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது. அதன்பிறகு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் சென்னை அணி வந்தால், முதல் ப்ளே-ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் சென்னை மைதானத்தில் விளையாடும்.

அல்லது இரண்டாவது ப்ளே-ஆஃப்பில் வெற்றி பெற்று எலிமினேட்டர் போட்டியில் சென்னை மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சூழலில், சென்னை மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோனி விளையாடும் கடைசிப் போட்டியாகக் கூட மாற வாய்ப்புள்ளது.

இதனால், சென்னை மைதானத்தில் தோனி விளையாடும் காட்சியை இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்காக டிக்கெட் பெறுவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இன்று காலை 10.40 மணியளவில் இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது.



.

Previous Post

இலங்கை மன்னாரில் அதானி மின் திட்டத்துக்கு ‘ஒரு துண்டு’ நிலம்கூட தர முடியாது- தமிழர்கள் ஆவேசம்! | Mannar Eelam Tamils protest against India Adani’s Wind Farms Project

Next Post

3 கட்ட தேர்தலில் மோடிக்கு போன கெட்ட செய்தி! 200க்கும் கீழே போகும் பாஜக? காங்கிரஸ் தந்த ரிப்போர்ட் | One thing is guaranteed after Phase 3 – Modi won’t be PM on June 4th says Congress top leader

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 கட்ட தேர்தலில் மோடிக்கு போன கெட்ட செய்தி! 200க்கும் கீழே போகும் பாஜக? காங்கிரஸ் தந்த ரிப்போர்ட் | One thing is guaranteed after Phase 3 – Modi won’t be PM on June 4th says Congress top leader

3 கட்ட தேர்தலில் மோடிக்கு போன கெட்ட செய்தி! 200க்கும் கீழே போகும் பாஜக? காங்கிரஸ் தந்த ரிப்போர்ட் | One thing is guaranteed after Phase 3 - Modi won’t be PM on June 4th says Congress top leader

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In