Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி? பாஜகவுக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 6, 2025
in அரசியல் செய்திகள்
0
தவெக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி? பாஜகவுக்கு பிடிகொடுக்காத ரங்கசாமி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 05, 2025 4:45 PM IST

புதுச்சேரியில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News18
News18

புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் இதே கூட்டணி தொடர பாஜக விருப்பம் காட்டும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அதற்கு இணக்கம் காட்ட மறுப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு இல்லை என்பதை காரணமாக கூறும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு, பாஜக சார்பில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தோல்வியை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டி வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுடன் முதலமைச்சர் ரங்கசாமி பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதே சமயம் துணைநிலை ஆளுநர், அதிகாரிகளால் அரசுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்படுவதாக அதிருப்தியை மட்டுமே வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டதற்கு ஜனவரி மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நிர்மல் குமார் சுரானாவை ரங்கசாமி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மற்றொரு புறம் தவெக தலைவர் விஜய்யுடன் எப்பொழுதும் இணக்கம் காட்டும் முதலமைச்சர் ரங்கசாமி, அவரது ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுப்பது பற்றி 5 முறை ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு காரணங்களால் அனுமதி தர முடியாமல் போனதால், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனையை ரங்கசாமி வழங்கினார்.

கூட்டணி தொடர்பாக அண்மையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு தகவல் உள்ளது. புதுச்சேரி கூட்டத்தில் பாஜகவை விமர்சிக்கும் விஜய், ரங்கசாமியை விமர்சிக்க மாட்டார் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Puducherry (Pondicherry)

First Published :

December 05, 2025 4:45 PM IST



.

Previous Post

Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" – பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

Next Post

திருமண வயதை எட்டாவிட்டாலும் பெரியவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கலாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் | ‘Right to Life Includes Right to Choose Partner’: Rajasthan HC Protects Young Live-In Couple

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமண வயதை எட்டாவிட்டாலும் பெரியவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கலாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் | ‘Right to Life Includes Right to Choose Partner’: Rajasthan HC Protects Young Live-In Couple

திருமண வயதை எட்டாவிட்டாலும் பெரியவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கலாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் | ‘Right to Life Includes Right to Choose Partner’: Rajasthan HC Protects Young Live-In Couple

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In