பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
திமுக எம்.பி.,யின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். ‘‘இன்று மார்ச் 10 ம் தேதி. இன்னும் 20 நாட்கள் இருக்கிறது, இந்த நிதிஆண்டு நிறைவு பெற. அரசு என்பது தெளிவாக உள்ளது. தமிழ்நாடு அரசுடன் கடந்த காலங்களில் நாங்கள் விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவர்கள் ஒரு காலகட்டத்தில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு, பிஎம்ஸ்ரீ தொடர்பானபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் கையெழுத்திட தயாராக இருந்தது. திமுக எம்.பி.,கள் என்னை சந்திக்க வந்தார்கள். இந்த கேள்வியை எழுப்பிய எம்.பி.,யும் என்னை சந்திக்க வந்தவர்களில் ஒருவர். தமிழக கல்வித்துறை அமைச்சருடன் வந்து அவர்கள் என்னை சந்தித்தார்கள்.
