Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Dharavi : கட்டுமான பணி தொடக்கம்; தாராவி குடிசைவாசிகளுக்கு குப்பை கிடங்கில் வீடு – கிளம்பிய எதிர்ப்பு | Dharavi redevelopment: State proposes sending residents to Deonar dumping yard

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 17, 2024
in அரசியல் செய்திகள்
0
Dharavi : கட்டுமான பணி தொடக்கம்; தாராவி குடிசைவாசிகளுக்கு குப்பை கிடங்கில் வீடு – கிளம்பிய எதிர்ப்பு | Dharavi redevelopment: State proposes sending residents to Deonar dumping yard
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டம்!

ஆனால் அப்பகுதி மக்கள் தாராவி மக்களை தங்களது பகுதியில் குடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் தாராவியில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட நிலம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவ்னார் குப்பை கிடங்கில் தாராவி மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேவ்னார் குப்பை கிடங்கு 326 ஏக்கர் பரப்புடையது ஆகும். அங்கு 1927-ம் ஆண்டில் இருந்து குப்பைகள் போடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு குப்பை போடப்படவில்லை. ஆனால் ஏற்கெனவே போடப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் கிடக்கிறது. அதிலிருந்து விஷவாயு வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த இடத்தில் 70 ஏக்கரில் தாராவி மக்களுக்கு மாற்று வீடு கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் புஷன் தெரிவித்துள்ளார்.

தேவ்னார் குப்பை கிடங்கு இருக்கும் நிலம் தாராவி மக்களுக்கு வீடு கட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரா கூறுகையில், “தாராவி குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்ட, தேவ்னார் குப்பை கிடங்கில் உள்ள 70 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது”‘ என்று குறிப்பிட்டார். ஆனால் தாராவி மக்களை குப்பை கிடங்கிற்கு அனுப்ப காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தாராவியை உள்ளடக்கிய தென்மத்திய மும்பை சிவசேனா எம்.பி அனில் தேசாய் கூறுகையில், ”தாராவி மக்களை தாராவியில்தான் குடியமர்த்தவேண்டும். அதற்கு தேவையான நிலம் தாராவியில் இருக்கிறது” என்றார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நசீம் கான் இது குறித்து கூறுகையில், ”தாராவி மக்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது. அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்” என்றார்.

இதற்கிடையே தாராவி குடிசைவாசிகளுக்கு மாற்று வீடு கட்டும் திட்டத்தை அதானி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்திற்காக ரயில்வேயிடமிருந்து மாட்டுங்காவில் வாங்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இப்பணிகளை தொடங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எளிய முறையில் தொடக்க விழாவை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்கிவிட்டனர். ரயில்வே ஊழியர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் இடிக்கப்படும். அதில் 20 முதல் 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். முதற்கட்டமாக அந்த வீடுகள் கட்டப்பட்ட பிறகு அதற்கு தாராவி குடிசைவாசிகள் மாற்றப்படுவார்கள். ஒவ்வொரு கட்டடத்திலும் 5 அடுக்கு வாகன நிறுத்தும் வசதி, ஹால், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் கட்டப்படும். ரயில்வேயிடமிருந்து தற்போது 29 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.



.

Previous Post

Multibagger stock: விரைவில் பங்கு பிரிப்பை அறிவிக்க உள்ள மோட்டிசன்ஸ் ஜூவல்லர்ஸ்.. மல்டிபேக்கர் பங்கு!-multibagger gold stock motisons jewellers stock split announced in an exchange filing

Next Post

சென்னை எழும்பூர், புதுச்சேரி, விழுப்புரம் ரயில்கள் நேரத்தில் மாற்றம் – பல ரயில்கள் ரத்து – அட்டவணை இதோ! | Southern railway changes timings of multiple trains – cancelled, rescheduled and diverted train details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை எழும்பூர், புதுச்சேரி, விழுப்புரம் ரயில்கள் நேரத்தில் மாற்றம் – பல ரயில்கள் ரத்து – அட்டவணை இதோ! | Southern railway changes timings of multiple trains – cancelled, rescheduled and diverted train details

சென்னை எழும்பூர், புதுச்சேரி, விழுப்புரம் ரயில்கள் நேரத்தில் மாற்றம் – பல ரயில்கள் ரத்து – அட்டவணை இதோ! | Southern railway changes timings of multiple trains – cancelled, rescheduled and diverted train details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In