Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நோ” சொன்ன இறையன்பு.. நெக்ஸ்ட் ரெடியான டிஜிபி சைலேந்திர பாபு.. ஸ்டாலினுக்கு போன விஷயம்.. பரபர கோட்டை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2023
in அரசியல் செய்திகள்
0
“நோ” சொன்ன இறையன்பு.. நெக்ஸ்ட் ரெடியான டிஜிபி சைலேந்திர பாபு.. ஸ்டாலினுக்கு போன விஷயம்.. பரபர கோட்டை
64
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai lekhaka-Hemavandhana
Updated: Tuesday, June 20, 2023, 19:00 [IST]
சென்னை: டிஜிபி சைலேந்திர பாபுவின் பணிஓய்வு குறித்த முக்கிய செய்தி ஒன்று நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.. இதுகுறித்து கோட்டை வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது… எனவே, இந்த இருவர் இடத்திலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.. தலைமை செயலாளர் பதவிக்கு சிலர் குறி வைத்திருப்பதை போலவே, டிஜிபி பொறுப்புக்கும் ஒருசிலர் வேகமாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. லிஸ்ட்: இதுஒருபுறம் இருந்தாலும், சைலேந்திர பாபு அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற துணைக்கேள்வியும் வட்டமடித்து வருகிறது.. காரணம், முதலில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் லிஸ்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைக்க வேண்டும்.. அதிலிருந்து 3 பேர் தேர்வுசெய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.. அதன் பிறகு 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வுசெய்யும்.. இதுதான் விதிமுறை. எனவே அதற்கான நடைமுறைகள் ஒருபக்கம் நடந்து வருவதாக தெரிகிறது.. இதையடுத்து, தமிழ்நாட்டின் டிஜிபி யாகப் பதவி வகித்துவரும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இந்த மாதம் ஓய்வுபெற உள்ளதால், ஓய்வுக்கு பிறகு, அரசு சார்ந்த மிகப்பெரிய பதவி ஒன்றில் அமர விரும்புகிறாராம்.. அந்த வகையில், கடந்த மாதமே இதுகுறித்து ஒரு செய்தி கசிந்தது.. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை.. சமீபத்தில்தான், டிஎன்பிஎஸ்சி அமைப்பில் காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவலும் வெளியானது.. எனவே, இந்த மாத இறுதியில் சைலேந்திர பாபு ஓய்வு பெறும்நிலையில், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று முணுமுணுப்புகள் கிளம்பின. கூடுதல் தகவல்: இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, தலைமை செயலாளரும் விரைவில் பணிஓய்வு பெறுவதால், அநேகமாக இவரை, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி நியமனம் செய்யலாம் என்றார்கள்.. ஆனால், தலைமை செயலாளர் பதவியை நிராகரித்து விட்டாராம்.. இதையடுத்து, “தலைமைச் செயலாளர்” தெரிவித்து விட்டதால், டிஎன்பிஎஸ்சி. சேர்மன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்களில் சொல்லப்பட்டது.. ஆனால், அதையும் தலைமை செயலாளர் விரும்பவில்லையாம். சைலேந்திரபாபு: இதை அறிந்த சைலேந்திரபாபு, மறுபடியும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மன் பதவியை குறி வைத்துள்ளாராம்.. ஆனால், இதற்கும் சில முட்டுக்கட்டைகள் கிளம்பி உள்ளனவாம். அதாவது, டிஜிபியாக இருந்து எந்த ஒரு முக்கிய விசயத்திலும், சாதுர்யமாக செயல்பட்டதாக தன்னை சைலேந்திரபாபு நிரூபிக்கவில்லை.. அத்துடன், மிக மிக சென்சிட்டிவ்வான பதவியான டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவியில் அவரை நியமித்தால், அது அவ்வளவாக ஆரோக்கியமாக இருக்காது என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.. ஆனால், இதற்கு மேலிட தரப்பு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.. அதேசமயம், சைலேந்திரபாபுவின் ஆசை நிறைவேறுமா? என்பது இந்த வாரத்தில் தெரியவரும்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
DGP Sylendra babus next major post and What is irai anbu IAS going to do

.

Previous Post

செந்தில் பாலாஜி கைது; ED-க்கு நோட்டீஸ் அனுப்பிய மாநில மனித உரிமைகள் ஆணையம்! | State human rights commission sent notice to enforcement directorate regarding the arrest of senthil balaji

Next Post

“எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லையா?” – மோசமான சாலைகளால் அவதியுறும் பொன்னேரி மக்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லையா?” - மோசமான சாலைகளால் அவதியுறும் பொன்னேரி மக்கள்

“எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லையா?” - மோசமான சாலைகளால் அவதியுறும் பொன்னேரி மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In