Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2000க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் ரீதியாகச் தந்தையும் மகனும் சேர்ந்து சீரழிப்பு.? தேவகவுடா பேரன் நாட்டை விட்டு எஸ்கேப்.. நாறும் கர்நாடக அரசியல் களம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 29, 2024
in Default
0
2000க்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் ரீதியாகச் தந்தையும் மகனும் சேர்ந்து சீரழிப்பு.? தேவகவுடா பேரன் நாட்டை விட்டு எஸ்கேப்.. நாறும் கர்நாடக அரசியல் களம்..
37
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடகத்தில் பல பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டப்படும் முன்னாள் பிரதமர் தேவ கௌடவின் பேரனும் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணா, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு தொகுதியான ஹாசனில் மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக, தேவகௌடாவின் பேரனும் ம.ஜ.த. கட்சித் தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டார்.

இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வால் ரேவண்ணா

பிரஜ்வால் ரேவண்ணா

பிரஜ்வாலால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவதால் இதுகுறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகெளடா, மகன்கள்  ஹெச்.டி. ரேவண்ணா, ஹெச்.டி. குமாரசாமி, பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோர், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கோப்புப் படம்

இதற்கிடையே, பிரஜ்வாலின் தந்தை ஹெச்.டி. ரேவண்ணாவும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ரேவண்ணா அங்கு பணிபுரிந்த 6 பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததையும் அவரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவும் பாலியல் சீண்டல்களைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஹெச்.டி. ரேவண்ணா

ஹெச்.டி. ரேவண்ணா

மேலும், பிரஜ்வால் இதை விடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அப்படி, 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வால் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற தகவல்கள் இணையத்தில் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக, ம.ஜ.த. கட்சியுடன் தனது கூட்டணியை கடந்த செப்டம்பர் மாதம் பாஜக அறிவித்தது. கூட்டணி தொடர்பான அதிருப்தியை அப்போதே பாஜகவினர் வெளிப்படுத்தினர்.

கடந்த டிசம்பர் மாதம் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த தேவராஜ கௌடா, பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு ரேவண்ணா குடும்பத்தினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும், அது தொடர்பான காணொளிகள் எதிர்க்கட்சியினரிடம் சிக்கியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் அவை பயன்படுத்தப்பட்டால் தேசிய அளவில் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் முன்னரே கடிதத்தின் மூலம் எச்சரித்துள்ளாக தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்ANI

தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததாலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் ம.ஜ.த. தலைவர் பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தன் அந்தரங்க விடியோக்களை செய்தி நிறுவனங்களோ இணையதளங்களிலோ வெளியிடக்கூடாது என்பதற்கான நீதிமன்ற தடை உத்தரவை கடந்த ஆண்டே பிரஜ்வால் ரேவண்ணா பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

Next Post

ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எங்கள் மசாலாக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்ததல்ல..! MDH

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எங்கள் மசாலாக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்ததல்ல..! MDH

ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எங்கள் மசாலாக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்ததல்ல..! MDH

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In