Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் – விவரம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 16, 2024
in Default
0
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் – விவரம்..!
56
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வுகள், ஆண்டுதோறும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படுகின்றன. நேர்காணல் தேர்வு முடிந்து தேர்ச்சி பெறாத சூழலிலும், முதலில் இருந்து தேர்வை எழுத வேண்டும்.

1016 பேர் தேர்ச்சி

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நேர்காணல் முடிவுகள் இன்று (ஏப்.16) வெளியாகின. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா (ADITYA SRIVASTAVA) என்னும் தேர்வர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் (ANIMESH PRADHAN) என்பவரும், மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி (DONURU ANANYA REDDY) என்னும் மாணவியும் பெற்றுள்ளனர். 

புவனேஷ் ராம் முதலிடம்

தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496ஆவது இடத்தைப் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

தேர்வர்கள் https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Previous Post

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

Next Post

முதியோர் உதவித் தொகையைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதியோர் உதவித் தொகையைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..

முதியோர் உதவித் தொகையைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In