Last Updated:
டெல்லி ஸ்ரீசாரதா இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் சைதன்யானந்தா, 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சாமியார் சைதன்யானந்தா கைது செய்யப்பட்டார்.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஸ்ரீசாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரான இருப்பவர் சாமியார் சைதன்யானந்தா. இவர் முதுநிலை டிப்ளமோ பயிலும் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சைதன்யானந்தா தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே மாணவிகளின் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து சைதன்யானந்தா கண்காணித்ததாகவும், இரவில் அவருடைய அறைக்கு வரும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இச்சூழ்நிலையில் தலைமறைவாக இருந்த சாமியாரை டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதன்யானந்தாவிடம் 5 நாட்கள் காவல்துறை விசாரணை நடத்துவதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
September 28, 2025 9:42 PM IST

