
சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லி செல்லும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச.5) வழக்கம் போல் இயங்கும்.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக கடலோர மாநிலங்கள் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை (டிச.5) செல்லும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் (எண் 12615) வழக்கம் போல் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, புதுதில்லியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமை (டிச.7) வரும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயிலும் (எண் 12616) வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரம் ரயில் ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்துக்கு திங்கள்கிழமை (டிச.4) இரவு 11.45 மணிக்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 06073) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக புவனேஸ்வரத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.5) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06074) முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…


