செவ்வாயன்று காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றத்திற்குப் பிறகு, மறுபடியும் காற்றின் தரக் குறியீடு (AQI) “மிகவும் மோசமான” (395) இலிருந்து இன்று “கடுமையான” (426) வகைக்கு நழுவியது.
மாசுபாட்டை எதிர்த்து, செயற்கை மழையை உருவாக்கும் சாத்தியத்தை டெல்லி அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நேற்று நடந்த கூட்டத்தில் செயற்கை மழை குறித்த திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்தது.
“இந்த மாதம் மேக விதைப்பு மூலம் செயற்கை மழையை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது,” என்று கூறிய கோபால் ராய், இது தொடர்பான தகவல்களை வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்றும், மத்திய அரசின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் கூறினார்.
செயற்கை மழையை வரவழைப்பதற்காக மழை மேக விதைகளை தூவும் பணியை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை cloud seeding என்று அழைபார்கள். இயற்கையை மனிதன் அழிக்கும் பொழுது இயற்கை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் மனிதன் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பு கொடுக்கும் என்பதற்கு இது உதாரணமாகும்.
ஆப் அடிப்படையிலான டாக்சிகளுக்கு தடை
பிற மாநிலங்களில் இருந்து தலைநகருக்குள் ஆப் அடிப்படையிலான டாக்சிகள் நுழைவதற்கு தில்லி புதன்கிழமை தடை விதித்துள்ளது. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள் மட்டுமே இப்போது தலைநகரில் இயங்க முடியும்.
10 நாள் பள்ளி இடைவேளை
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை இரண்டு கட்ட குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என்று கல்வி இயக்குனரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மீதமுள்ள இடைவேளைக்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்,” என்று அது கூறியது.


இதே போன்ற நிலை விரைவில் தமிழ்நாட்டிலும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன அதை தவிர்க்க வேண்டுமானால் முதலில் அரசாங்கம் ஆனது குப்பைகளை எரிக்கும் பழைய முறைகளை விட்டுவிட்டு புதிய நவீன முறைகளை கையாள வேண்டும் பழைய முறையில் குப்பைகளை எரிப்பதால் எரிக்கும் இடத்திற்கே சென்று பாருங்கள் மக்களே எவ்வளவு புகை என்று சுற்றுப்புற சூழலுக்கு எவ்வளவு கேடாக உள்ளது என்று தெரியும். மேலும் கிராமப்புறங்களில் இன்னும் இறந்தவர்களின் பிரேதங்களை எரிப்பதற்கு பழைய விறகு வறட்டி முறைகளை கையாளப்படுகின்றன இதனாலையும் சுற்றுப்புற சூழல் மிகவும் கெட்டுப் போகிறது மேலும் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் புதியது புதியதாக மரங்களை வைத்து நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும் இதுவே நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து