மாநில அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை, கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தாலுகா வாரியாக ரேஷன் கார்டுதாரர்கள் கணக்கிட்டு வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வழங்கப்படும். பின்பு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.
இந்தாண்டு தாலுகா அலுவலகங்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வந்து சேர்ந்து விட்டது. ஆனால் எந்த ரேஷன் கடைக்கு எத்தனை வேட்டி, சேலைகள் அனுப்ப வேண்டும் என்ற கணக்கிடும் பணிகள் முடிவடையவில்லை. மாவட்டத்தில் 431 முழுநேர ரேஷன் கடைகள், 111 பகுதி நேர ரேஷன் கடைகள் என 542 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளில் 4லட்சத்து 31 ஆயிரத்து 155 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது தோராய கணக்கின்படி இலவச வேட்டி சேலைகள் வந்துள்ளன. எத்தனை வழங்க வேண்டும், ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தயாராகவில்லை. தாலுகா வாரியாக ஒதுக்கீடு விவரங்கள் கேட்க்கப்பட்டுள்ளன’ என்றனர்.
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கரும்பு கொள்முதல் பற்றி இதுவரை எந்த அரசாணையும் பிறப்பிக்க வில்லை. கடைசி நேரத்தில் கரும்பு கொள்முதல் பற்றி அறிவித்தால், அதிகாரிகள் மட்டுமின்றி அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்’ என்றனர்.
இன்னும் பொங்கல் பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களே உள்ள நிலையில் ரேஷன் கடைகளுக்கு வேட்டி,சேலை, கரும்பு போன்றவை ஒதுக்கீடு பணி நிறைவு பெறததால் மக்களுக்கு உரிய நாளில் கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


