Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடகத்தில் கடந்த 2019 முதல் 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி, அமைச்சர் பதவிக்கு ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கொரோனாவைத் தடுக்கும் உபகரணங்களுக்கான டெண்டர் விவகாரத்தில் 75 சதவிகிதம் கமிஷன், பொதுப்பணித்துறை டெண்டரில் 40 சதவிகித கமிஷன், மதம்சார்ந்த அமைப்புகளுக்கு 30 சதவிகித மானியம் வழங்கியது என குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கேசவ பிரசாத் 2023 மே மாதம் 8ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட இன்னும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பாஜகவின் பெயருக்கு அவப்பெயர் விளைவிப்பதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். இவர்களுக்கு கடந்த 1ம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆனால் ராகுல் காந்திக்கு இன்னும் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜுன் 1ம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் மக்களவைத் தேர்தலின் காரணத்தினால் ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மேலும் காலஅவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜுன் 7-ல் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், ஒரு வழக்கறிஞர் இறந்ததால், நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 7) இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதனால் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

வந்தே பாரத் இப்படி செய்யாதீர்கள் – செஞ்சா மாட்டிக்குவீங்க, அதிக அளவில் அபராதம் வேற கட்டணும்! | You can’t smoke in vande bharat trains – vande bharat has censors, heavy fines will be imposed

Next Post

Today Gold Rate: இப்படியே போனா எப்படி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!-todays gold and silver prices in chennai 7 june 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold Rate: இப்படியே போனா எப்படி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!-todays gold and silver prices in chennai 7 june 2024

Today Gold Rate: இப்படியே போனா எப்படி.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!-todays gold and silver prices in chennai 7 june 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In