நீண்டநாள் கோபத்தின் வெளிப்பாடு – கே.பி.முனுசாமி
இது தொடர்பாக பேசிய அதிமுக துணைப்பொதுச்செயலாளார் கே.பி.முனுசாமி “விஜய் அதிமுக இடத்தை குறிவைக்கவில்லை. அவர் சரியாகவே சொல்லியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் அவர் நடித்து படங்கள் வெளியிட்டபோது எந்த சிரமமும் இல்லாமல் பணம் சம்பாதித்தார். ஆனால், திமுக ஆட்சியில் ஒரு படத்தை வெளியிட பல சிரமங்களை சந்தித்தார். வினியோகத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அவரது மனம் புண்பட்டு, வேதனை அடைந்திருக்கிறார்,” என்று முனுசாமி கூறினார். “இது அரசியல் சிந்தனை அல்ல, நீண்ட நாள் மனதில் இருந்த கோபத்தின் வெளிப்பாடு. அந்த கோபம் திமுக தலைவர்கள் மீதுதான் உள்ளது. அதனாலேயே, ‘எங்களுக்கும் திமுக-விற்கும் போட்டி’ என்று சொல்லியிருக்கிறார்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
