எண்ணூர் CPCL ஆலையிலிருந்து எண்ணெய் கசிந்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், திருவொற்றியூர் திருச்சிண்ங்குப்பம், மற்றும் திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் எண்ணூர் விரைவு சாலையில் ஊர்வலமாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






அப்பகுதி மீனவ மக்களின் வீடுகள், படகுகள், மீன் வலைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாக கேவிக்குரியாகியுள்ளது.
திருவொற்றியூர் எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் தினம்தோறும் போராட்டம் கூடுவதும் கலைத்து போவதுமாகவே உள்ளது.


மக்களுக்கு நல்ல செய்திகளை வெளியிடும் உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்🙏