சிபிசிஎல் நிறுவனத்தினர் விவசாய நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி எல்லை கற்கள் பதித்தனர். இந்நிலையில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை, அப்போது நிறைவேற்றி தருவதாக சொன்ன வாக்குறுதிகள் இது வரை முழுமையாக நிறைவேற்றவில்லை, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தற்போது நிலத்தை கையகப்படுத்தி செய்யப்படுகின்ற விரிவாக்க பணிகளுக்கும், நிலத்தை கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தோம்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் எல்லை கற்களை பிடிங்கி எரிந்து போராட்டம் நடத்திய பெண்களை இழுத்து சென்று கைது செய்தது கொந்தளிக்க வைத்தது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் நூறு பேர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து எங்கள் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிபிசிஎல் நிறுவனம் முறையாக நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பது எங்களுடைய நியாமான கோரிக்கை.
