Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி
35
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சுமாா் 150 வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அதேகாலனியில் வசிக்கும் கோபால் மகன் ரவிக்குமாா் என்பவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா்த் தொட்டி.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை(ஏப்.25) அந்த பகுதியில் குடிநீா் விநியோகம் செய்த போது குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞா்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறிப் பாா்த்தபோது மாட்டுச் சாணம் கிடந்துள்ளது. அவா்கள் இதுகுறித்து கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனா்.

மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியவட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.

அதன்பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து குடிநீா் தொட்டியை பாா்வையிட்டனா்.

மேலும், குடிநீா்த் தொட்டியில் இருந்த மாட்டுச் சாணத்தை சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி மாட்டுச் சாணம் தானா என கண்டறியப்படும். அது உறுதி செய்யப்பட்டால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Previous Post

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

Next Post

ஜவ்வரிசி ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜவ்வரிசி ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

ஜவ்வரிசி ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம்… மனைவி கொடுத்த கடிதம்… வசமாக சிக்கிய மகன்… பின்னணியில் பகீர்!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஏற்கனவே குடிநீர் தொட்டியில் மனித சாணம் கலந்ததையே இன்னும் கண்டுபிடிக்க வில்லை இதற்குள் மாட்டு சாணம் கலக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தப்பட வேண்டியது மனித கழிவை கலந்து அவனையும் மாட்டு சாணத்தை குடிநீரில் கலந்தவனையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும் இது போன்ற மட்டமான செயலில் ஈடுபடக் கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In