இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), துவாரகா எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தில் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை வேண்டுமென்றே உயர்த்தி, நிலத்தை கொடுத்தவர்களுக்கு அதிகப்படியான தொகையை ஈடாக வழங்கியது தொடர்பான வழக்கில், தில்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் மகன் கரண் சவுகானை தொடர்புபடுத்தும் அவதூறு கட்டுரையை நீக்குமாறு தி வயருக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
“துவாரகா எக்ஸ்பிரஸ்வே” சாலை திட்டத்தில் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு ₹53 லட்சம் மதிப்பீட்டின் அடிப்படையில் சர்ச்சையில் உள்ள 19 ஏக்கர் நிலத்திற்கு 41.52 கோடி ரூபாய் வழங்கவேண்டும் , ஆனால் அதற்கு பதிலாக சுபாஷ் சந்த் கதுரியா மற்றும் அவரது சகோதரர் வினோத் கதுரியா ஆகிய இரு நபர்களுக்கு மே 15, 2023 அன்று ₹353 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. 19 ஏக்கர் நிலத்தின் பயனாளிகளில் ஒருவரான சுபாஷ் சந்த் கதுரியா, கரண் சௌஹானுடன் (தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் மகன்) நெருங்கிய வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
திரு. நரேஷ் குமார் நீதிமன்றத்தை நாடிய பின்னர் நிறைவேற்றப்பட்ட ஒரு இடைக்கால உத்தரவில், நீதிபதி சச்சின் தத்தா தலைமைச் செயலருக்கு ஆதரவாக இடைக்காலத் தடை விதித்து, கட்டுரை மற்றும் தொடர்புடைய ட்வீட்களை நீக்குமாறு தி வயர் மற்றும் சம்பந்தப்பட்ட நிருபருக்கு உத்தரவிட்டார். விரிவான உத்தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நவம்பர் 9 அன்று வெளியான தி வயர் கட்டுரை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரிய அதிகாரியின் மனு மீதான தீர்ப்பை செவ்வாயன்று நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
திரு. குமார், தனது மனுவில், தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக மேலும் அவதூறான கட்டுரைகளை வெளியிடுவதைத் தடுக்கவும், செய்தி இணையதளம் மற்றும் நிருபர்களைத் தடுக்கவும், கட்டுரையை நீக்கவும் கோரினார். குமார் அவர்களின் வக்கீல் கூறும்போது தனக்கு எதிராக மக்களை “செயல்படுத்த” மற்றும் “சிலரை மகிழ்விப்பதற்காக” இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது , மற்றும் “திட்டமிடப்பட்டது” என்று கூறியிருந்தார்.
குமாரை எந்த வகையிலும் அவதூறு செய்யவில்லை, ஆனால் சில கேள்விகளை மட்டும் இந்த கட்டுரை எழுப்பியுள்ளது. என்று தி வயர்-இன் வழக்கறிஞர் கூறினார்.

