Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்… காவல் நீட்டிப்பு! நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்... காவல் நீட்டிப்பு! நீதிமன்றம் உத்தரவு!
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரானார். பின்னர், செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 28ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய பணத்தை வெளிநாடுகளில் பறிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானது தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.

Tags: உததரவகவலசகசநதலநடடபபநதமனறமபலஜககமணடம
Previous Post

நீதி, உண்மை, தர்மத்துக்கு கிடைத்த தீர்ப்பு: இபிஎஸ்

Next Post

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல்: சிதம்பரத்தில் 4 பேர் மீது வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல்: சிதம்பரத்தில் 4 பேர் மீது வழக்கு

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல்: சிதம்பரத்தில் 4 பேர் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In