காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்ஹிந்த் புரத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்பு பேசிய மாநகர் 5ஆம் பகுதி காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி 31வது வார்டு கவுன்சிலருமான தல்லாகுளம் முருகன், பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் இளம் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என அதே கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் விளக்கி பேசினர். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநகர் மாவட்ட, புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



