2018 இல் ஆடிடர் குருமூர்த்தி பதிவிட்ட சர்ச்சைக்குரிய Tweet இன்று அவர் நிபந்தனை இல்ல மன்னிப்பு கேட்டதால் முடித்து வைக்கப்பட்டது..
குருமூர்த்தி செய்த ட்வீட் , நீதிபதி முரளிதர் மூத்த வழக்கறிஞர் பி சிதம்பரத்தின் இளையவரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
விசாரணையின் போது நீதிபதி மிருதுல் வழக்கறிஞர்கள் தரப்பு வழக்கறிஞரிடம் வாய்மொழியாக கூறியதாவது:
“சில சமயங்களில் நோய்க்கான நிவாரணம் நோயை விட மோசமானது. இந்த சர்ச்சையில் ஒரு கெளரவமான நீதிபதியின் பெயரை தேவையில்லாமல் எல்லா நேரத்திலும் இழுகின்றனர்., … எங்கள் கண்ணியத்திற்காக நாங்கள் செய்தித்தாள் அறிக்கைகள் மற்றும் ட்வீட்களை நம்பியிருப்பதாக நினைக்கிறீர்களா? நாம் ஏற்கனவே கூறியது போல், நமது கண்ணியம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. நாங்கள் எங்கள் கண்ணியத்திற்காக நியாயமான அல்லது நியாயமற்ற விமர்சனங்களைச் சார்ந்து இருக்கவில்லை. என்று கூறினார்.
இதனை அடுத்து குருமூர்த்தி மன்னிப்பு கேட்டதால் அந்த மன்னிப்பை ஏற்று இந்த கேஸ் முடித்து வைக்கப்படுகிறது என்று தீர்பளித்தனர்.

