ஒப்பந்தம் கேட்டும் பெற முடியவில்லை என புலம்பல்
ஒப்பந்தங்கள் மற்றும் சம்பாதிப்பு குறித்து ஆ.ராசா பேசுகையில், “எம்எல்ஏ-விடம் போனேன், வி.ஜி.ஆரிடம் போனேன், எந்த ஒப்பந்தமும் கொடுக்கவில்லை. அமைச்சர் நாசரிடம் மனு கொடுத்தேன், எதுவும் செய்யவில்லை, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏவிடம் போனேன், ‘அடுத்த வாரம் பார்க்கிறேன்’ என்றார், ஆனால் ஒன்றும் பார்க்கவில்லை. காண்ட்ராக்ட் கேட்டேன், கொடுக்கவில்லை. எதுவுமே இந்த ஆட்சியில் நான் சம்பாதிக்கவில்லை என்ற வருத்தம் உங்களிடம் இருக்கலாம், இருக்கக்கூடும். இது எனக்கு தெரியும், இதை நிச்சயமாக மாற்ற வேண்டும், மாற்றப்பட வேண்டும். அடுத்த ஆட்சி அமைந்த பிறகு, இதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்,” என்று ஆ.ராசா உறுதியளித்தார்.
