மக்களவைத் தேர்தல் முடிவு தொடர்பான கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவன் கேரா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஏற்கேனவே பதிவு செய்துள்ளனர், அவர்கள் மூலம் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன்பு, டிஆர்பிக்காக ஊடகங்கள் நடத்தும் எந்த ஒரு கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள்.
