இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் ஒரு இடத்தை காங்கிரஸுக்கு அளிக்க தேசிய மாநாட்டுக் கட்சி முன்வந்ததாகவும், ஆனால், காங்கிரஸ் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமைச்சரவைக்கு வெளியில் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஒமர் அப்துல்லா, மொத்தமுள்ள 9 அமைச்சர் பதவிகளையும் நிரப்பப் போவதில்லை, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
