புதுடில்லி: “பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அவையை பா.ஜ.,வினர் செயல்பட விடத் தயாராக இல்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின், கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் நடந்தது தீவிரமான பிரச்னை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என, பார்லிமென்டில், மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.
ஆனால் அவர் வர விரும்பவில்லை. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அவையை பா.ஜ.,வினர் செயல்பட விடத் தயாராக இல்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. என்றார்.


கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை