புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, டில்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்திராவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இரும்பு பெண்மணி நம் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் இல்லை என்றாலும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டியது நம் கடமை