Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

புலன் விசாரணை முடிவிலேயே முழுமையான விவரம் தெரியவரும். புகார் கொடுக்கும்போது மாவட்ட கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தையும் சேர்த்து கொடுத்துள்ளனர். அதுவரை அந்த கடிதம் தனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

கடந்த 2 ஆம் தேதி இரவு மாயமான கே.பி. ஜெயக்குமார், அதன்பின், வீடு திரும்பவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து, காணாமல் போன, ஜெயக்குமாரை அதிகாரிகள் தேடி வந்தனர். இதனிடையே, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், இன்று(மே. 4) ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன ஜெயக்குமாரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சம்பவ இடத்திலிருந்து கிடைத்திருப்பதாகவும், அதனைக் கொண்டு, ’ஜெயக்குமாரின் உடல் இது’ என்ற முடிவுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். முன் விரோதத்தால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், ஜெயக்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உடற்கூராய்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியான பின், அவரது மரண வழக்கில் மேற்கொண்டு விசாரணை முடுக்கி விடப்படுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



.

Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

Next Post

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரஜ்வலால்  பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In