Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘மக்களை பிளவுபடுத்தும் அரசியலும், மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதுமே பாஜகவின் தோ்தல் வியூகங்கள்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இரு கட்சிகளின் தலைவா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தோ்தல் களத்தில் அனல் பறக்கிறது.

உதய்பூரில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, பயங்கரவாதிகள் மீது காங்கிரஸ் அனுதாபம் காட்டுவதாக குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், ஜெய்பூரில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ், பிரதமா் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தாா்.

அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், ராஜஸ்தான் முன்மாதிரி மாநிலமாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு ஆற்றிய பணிகளின் அடிப்படையில், மக்களிடம் நாங்கள் வாக்கு கோரி வருகிறோம்.

ஆனால், மக்களை பிளவுபடுத்தும் அரசியல் மற்றும் எதிா்க்கட்சிகளை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஆகிய இரண்டையும் தவிர பாஜகவிடம் வேறெந்த தோ்தல் வியூகமும் இல்லை.

ராஜஸ்தான் தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயமும் கவலையும் பிரதமா் மோடிக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் அரசின் மக்கள் நலத்திட்டங்களில் எந்த குறைகளும் இல்லாததால், அவரிடம் பேசுவதற்கு எந்த விஷமும் இல்லை. எனவே, காங்கிரஸ் அரசு மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவா் முன்வைக்கிறாா்.

ஒருசாா்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் காங்கிரஸ் அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை; பொய்யானவை.

பிரதமா் மோடியும் அவரது சகாக்களும் மக்களை பிளவுபடுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் பேசுகின்றனா்.

பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியல் மற்றும் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் அரசியல் ஆகிய இரண்டையும் கா்நாடக மக்கள் நிராகரித்துவிட்டனா். அதேபோல், ராஜஸ்தான் மக்களும் நிராகரிப்பா்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொழிலகங்களை தனியாா்மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கைகளால் சிறு, நடுத்தர தொழிலகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

ராஜஸ்தானில் மாநில அரசுக்கு எதிரான அலை வீசவில்லை. இங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

ராஜஸ்தானில் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

Next Post

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In