Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித் துறைதான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித் துறைதான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேர்தல் எப்போது வந்தாலும் பாஜகவின் முக்கிய ஆயுதம் அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறைதான் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். 

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எப்போது தேர்தல் வந்தாலும் பாஜகவின் முக்கிய ஆயுதம் அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறைதான். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலே இதை நாங்கள் பார்த்தோம். தேர்தல் நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினார்கள்.

இப்போது மிசோரம் உள்பட 5 மாநிலங்களிலும் மக்களின் மனநிலை மிகத் தெளிவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நன்மதிப்பைப் பெற்றுள்ளது. மாநிலங்களின் பல்வேறு திட்டங்கள் சாமானிய மக்களைச் சென்றடைந்துள்ளன.

ஆனால் பாஜகவினரின் இப்போதைய ஒரே இலக்கு சத்தீஸ்கர் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு இருப்பதால் தேர்தல் ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, சத்தீஸ்கர் முதல்வர் மீது குற்றம்சாட்டி சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

துபாயில் இருந்து செயல்படும் மகாதேவ் செயலிக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? எது அவர்களைத் தடுக்கிறது?

ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரின் வீட்டு வாசலிலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் சத்தீஸ்கர் மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு நவ. 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களிடம் இருந்து மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக கூறியுள்ள அமலாக்கத் துறை, இது தொடா்பாக விசாரித்து வருகிறது. .

Previous Post

தேர்வறைக்குள் நுழைந்த 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி

Next Post

மக்களிடம் கொள்யைடித்தவர்கள் சிறை செல்வார்கள்; பிரதமர் மோடி உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்களிடம் கொள்யைடித்தவர்கள் சிறை செல்வார்கள்; பிரதமர் மோடி உறுதி

மக்களிடம் கொள்யைடித்தவர்கள் சிறை செல்வார்கள்; பிரதமர் மோடி உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In