Last Updated:
கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் ராப் பாடகர் வேடனின் பாடலை இணைத்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல ராப் பாடகர் வேடன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற பாடலை வெளியிட்டார். இதனையடுத்து, இவர் மீது பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் வி.எஸ்.மினிமோல், என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இந்த சம்பவத்திற்கு முன்பே கேரளாவில் பெரும் பிரபலமாகவும், சமூக வலைத்தளத்தில் பிரபலமாகவும் இருந்த வேடன், இந்திய அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில், இவரின் ஒரு பாடலை கோழிக்கோடு பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகம், தனது பி.ஏ. மலையாளம் பிரிவின் நான்காவது செமஸ்டர் பாடத்தில் இவரின் பாடலையும், அமெரிக்க ராப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடலையும் ஒப்பிட்டு திறனாய்வு செய்யும் பிரிவில் இணைத்துள்ளது.
அமெரிக்க ராப் இசைக்கும் மலையாள ராப் இசைக்கும் இடையிலான ஒப்பிட்டு ஆய்வைப் படிப்பதே இதன் நோக்கம். பாடல்கள் இரண்டு வீடியோ இணைப்புகளாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மைக்கேல் ஜாக்சனின் “They Don’t Care About Us” ( ‘They Dont Care About Us’) ஏப்ரல் 8, 1996 அன்று வெளியிடப்பட்டது. இது அவரது ஒன்பதாவது ஆல்பமான ஹிஸ்டரி: பாஸ்ட், பிரசண்ட் அண்ட் ஃபியூச்சர், புக் I (1995) இன் நான்காவது தனிப்பாடலாகும். “They Don’t Care About Us” என்ற எதிர்ப்புப் பாடல் ஜாக்சன் எழுதியதில் மிகவும் சர்ச்சைக்குரிய பாடல்களில் ஒன்றாகும். இந்தப் பாடலின் வரிகள் யூத-விரோதமானவை என்று விமர்சிக்கப்பட்டன. இருப்பினும், “They Don’t Care About Us” ஐரோப்பிய நாடுகளில் முதல் 10 வெற்றிப் பாடல்களில் ஒன்றாக மாறியது. இந்தப் பாடலுடன் கேரள ராப் பாடகர் வேடனின், ‘பூமி நான் வாழுமிடம்’ (‘Bhoomi Njan Vazhunnidam’) பாடலை ஒப்பிடுவதற்கு இணைக்கப்பட்டுள்ளது.
June 11, 2025 5:54 PM IST
மைக்கேல் ஜாக்சன் பாடலுடன் ஒப்பிட்டு ஆய்வு… கேரளா பல்கலைக்கழக பாடத்தில் ராப் பாடகர் வேடனின் பாடல்

