அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசியதாவது, ‘திமுக-வின் ஆட்சியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அற்புதமான ஆட்சி என விதந்தோதியிருக்கிறார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். உங்களுக்கு சீட்டை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு செல்ல முடியும்? 4 ஆண்டுகளாக இந்த நாட்டிலே நடக்கிற அக்கிரமங்களை தட்டிக் கேட்க கூட்டணிக் கட்சிகளுக்கு வக்கில்லை.
