மதுரை சமூகவியல் கல்லூரி முதுகலை சமூகப்பணி முதலாமாண்டு மாணவ மாணவிகள் 44 பேர் பேராசிரியர் திருமதி . மீனலோசினி தலைமையில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இன்று மதுரை மத்திய சிறைக்கு வருகை புரிந்தனர்.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காக எடுக்கப்பட்டு வரும் பல்வேறு வகையான நடவடிக்கைகள் குறித்து மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு .பழனி அவர்கள் மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் விளக்கிக் கூறினர் .
முன்னதாக மதுரை மத்திய சிறையை சுற்றி பார்த்த மாணவ மாணவிகள் அங்கு சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள், மனநல பயிற்சி வகுப்புகள், கவுன்சிலிங் வழங்கப்படும் முறைகள் மற்றும் தொழில் கூடங்களில் அவர்கள் பணிபுரியும் இடங்களையும் நேரில் பார்வையிட்டனர்
மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் வைகை சுதந்திரப் பறவைகள்
இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரியையும் கண்டு களித்தனர்.
மேலும் மாணவ மாணவிகள் சிறைவாசிகளுடன் இணைந்து பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
மதுரை மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறைசந்தையை பார்வையிட்டு சிறை சந்தை செயல்பாடுகளை பற்றியும் அறிந்து கொண்டனர்
மேலும் அங்கு சிறைவாசிகளால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு உள்ள ரெடிமேட் ஆடைகள் கலை நியமிக்க மர வேலைப்பாடு பொருட்களை கண்டு வியந்தனர்.
இது குறித்து கல்லூரி மாணவி கூறியதாவது எங்களது முதுகலை சமூக பணி முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பிரிசன் கவுன்சிலிங் என்ற ஒரு பாடத்திட்டத்தில் சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணி பங்களிப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக நாங்கள் இன்று மதுரை மத்திய சிறைக்கு வருகை புரிந்தோம் .
இங்கு சிறைவாசிகளுக்கு சிறைத்துறை
மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பணிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியதாக கூறினர்.
தங்கள் மாணவர்களுக்கு இது ஒரு முழுமையான பிராக்டிகல் பயிற்சி வகுப்பாக இன்றைய நாள் அமைந்ததாகவும் அதற்கு அனுமதி அளித்த சிறைத்துறை டிஜிபி. திரு .அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் மற்றும் மதுரை சிறைத்துறை டிஐஜி திரு.பழனி மற்றும் சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார்
ஆகியோருக்கு பேராசிரியர் திருமதி. மீனலோசினி அவர்கள் நன்றி தெரிவித்தார்..


சிறையை சுற்றி பார்த்தீர்கள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் கலந்துரையாடல் செய்தீர்கள் ஆனால் அங்குள்ள சிறை வாசிகளிடம் கலந்துரையாடல் செய்தீர்களா. சுற்றி பார்ப்பதற்கு சிறை உண்ணும் பொழுதுபோக்கு மையம் அல்ல. சிறையில் நடக்கும் தற்கொலைகளை தாங்களே வலிய தலையிட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்து உயிரிழந்த சிறைவாசிகளின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன். மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்வதற்கோ அல்லது வழக்காடுவதற்கோ வழக்கறிஞர்களின் சேவை வேண்டியது இல்லை தாங்களே வழக்கு பதிவு செய்யலாம், தாங்களே வழக்காடலாம் கட்டணம் எதுவும் கிடையாது இதற்கு சிறையை சுற்றிப் பார்த்த மாணவர்கள் முன் வர வேண்டும்