
இதனை தொடர்ந்து புதிய பாலத்தில் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்து வகையிலான இந்த தூக்கு பாலத்தினை தூக்கி பார்த்து ஆய்வு செய்யும் வகையில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென பழைய மற்றும் புதிய தூக்கு பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த பாதையின் வழியாக இந்திய கடலோரக் கடற்படை கப்பல் மற்றும் இரண்டு பெரிய மீன்பிடி படகுகள் சென்றன. இதன் மூலம் புதிய தூக்கு பாலம் நல்ல முறையில் சுமார் 15 அடி உயரத்திற்கு தூக்கி பார்த்து சோதனை செய்யப்பட்டது.
கப்பல் செல்லும் வகையில் ஒரே நேரத்தில் பழைய புதிய பாலங்கள் திறக்கப்பட்டதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் பாம்பன் சாலை பாலத்தில் குவிந்திருந்தனர். ஒரே நாளில் காலி பெட்டிகளுடன் கூடிய ரயில்களும், கப்பல் செல்ல ஏதுவாக தூக்கு பாலத்தை திறந்து ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த புதிய பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
