தமிழகத்திற்கு டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
டிரில்லியன்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது. மேலும், நைக் நிறுவனம் தனது காலணி உற்பத்தியை சென்னையில் விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
முன்னதாக, தமிழகத்தில் 5000 பேருக்கு வேலையளிக்கும் சுகாதாரத்துறைக்கு தேவையான உபகரணங்கள் தயாரிக்கும் ஆப்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மற்றும் மதுரையில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்துக் கேட்டுக்கொண்டனர்.
