இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தூய அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய குடிலில் குழந்தை இயேசுவுக்கு மாலையணித்து ஜெபம் செய்தனர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி நடனமாடினர் .கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினர் ஜோசப் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


