இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுா்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 7-ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே 1 ஆம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகிறது. தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நடைபெறவுள்ளது.
