சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனுஷைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தார் நடிகர் சிரஞ்சீவி.
குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 அன்று வெளியானது. இந்தநிலையில், படம் வெளியாகி 3 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், குபேரா வெற்றிவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 22) ஹதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
