Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களின்‌ விலை உயர்வினைக்‌ கட்டுப்படுத்திட முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2023
in சமீபத்திய செய்திகள், அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பார்த்து சிலருக்கு எரிச்சல்,பொறாமை.. முதல்வர் ஸ்டாலின் டைரக்ட் அட்டாக்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களின்‌ விலை உயர்வினைக்‌ கட்டுப்படுத்திட உரிய
நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, மாண்புமிகு ஒன்றிய ஜவுளி, வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்‌,
நுகர்வோர்‌ விவகாரங்கள்‌, உணவு மற்றும்‌ பொது விநியோகத்‌ துறை அமைச்சர்‌
திரு. பியூஷ்கோயல்‌ அவர்களுக்குக்‌ கடிதம்‌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, மாண்புமிகு
ஒன்றிய ஜவுளி, வர்த்தகம்‌ மற்றும்‌ தொழில்‌, நுகர்வோர்‌ விவகாரங்கள்‌, உணவு மற்றும்‌ பொது
விநியோகத்‌ துறை அமைச்சர்‌ திரு பியூஷ்‌ கோயல்‌ அவர்களுக்கு நேற்று ( 11-7-2023)
எழுதியுள்ள கடிதத்தில்‌, உணவுப்‌ பொருள்‌ பணவீக்கத்தில்‌ காணப்படும்‌ கவலைக்குரிய நிலை
குறித்து ஒன்றிய அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவர விழைவதாகவும்‌, உணவுப்‌
பொருட்களின்‌ விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும்‌ பாதிப்பைக்‌ குறைப்பதில்‌
மாநில அரசுகளுக்கு உதவிடத்‌ தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும்‌
கேட்டுக்கொண்டுள்ளார்‌.

அத்தியாவசிய உணவுப்‌ பொருட்களான அரிசி, கோதுமை, துவரம்‌ பருப்பு, உளுத்தம்‌
பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின்‌ விலை உயர்வினால்‌, ஏழை மற்றும்‌ நடுத்தரக்‌
குடும்பத்தினர்‌ பெரிய அளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்று தெரிவித்துள்ள மாண்புமிகு
முதலமைச்சர்‌ அவர்கள்‌, ஏற்கெனவே, பணவீக்கத்தைப்‌ பொறுத்தவரையில்‌, 2023 மே
மாதத்தில்‌, தானியங்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தயாரிப்புகளுக்கு 12.65% ஆகவும்‌, பருப்பு
வகைகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ தயாரிப்புகளுக்கு 6.56% ஆகவும்‌ இருந்தது என ஒன்றிய
புள்ளியியல்‌ மற்றும்‌ திட்ட அமலாக்க அமைச்சகத்தால்‌ வெளியிடப்பட்டிருந்த நிலையில்‌,
சமீபத்தில்‌ ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும்‌ மோசமாக்க
வாய்ப்புள்ளதாக தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இந்த நிலையில்‌, கூட்டுறவு விற்பனை நிலையங்கள்‌ மற்றும்‌ உழவர்‌ சந்தைகள்‌ மூலம்‌
காய்கறிகள்‌, உணவு தானியங்கள்‌ மற்றும்‌ பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட
குறைவான விலையில்‌ விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும்‌ நீண்டகால
நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும்‌, நியாயவிலைக்‌ கடைகள்‌
மூலம்‌ அனைத்துக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ மாதந்தோறும்‌ துவரம்‌ பருப்பு, சர்க்கரை,
பாமாயில்‌ ஆகியவற்றை மானிய விலையில்‌ வழங்கி வருவதாகவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌
அவர்கள்‌ தனது கடிதத்தில்‌ தெரிவித்துள்ளார்‌.

Previous Post

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறக்க திட்டமா? அமைச்சர் என்ன இப்படி சொல்றாரு.. கொதித்தெழுந்த ஓபிஎஸ்!

Next Post

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In