2024 ஜூலைக்குள் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்கள். ஆனால், இப்போது வரை சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கே வரவில்லை. பெரும்பாலான பணிகள் இன்னும் முடியவில்லை. வெறும் இரண்டே இரண்டு நபர்களை வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களெல்லாம் இணைந்து போராட போகிறோம் என தெரிந்தவுடன் தொகுதி எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி சார்பில் 80% பணிகள் முடிந்துவிட்டதாகவும் மே மாதத்துக்குள் சுரங்கப்பாதை திறக்கப்படும் என பேனர் வைக்கிறார்கள். ஆனால், அதற்கான சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. அரசு விரைந்து இதில் தலையிட்டு எங்களின் இன்னல்களை போக்க வேண்டும்.’ என ஆதங்கத்தோடு பேசி முடித்தார் ஆசிப்.

‘முதல்வர் தாத்தா எங்களால ஒழுங்கா ஸ்கூலுக்குப் போக முடியல…’ என்ற பதாகைகளோடு சிறுவர்களும் கூட மக்களோடு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இராயபுரம் எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தியும் போராட்டத்துக்கு வந்து மக்களிடம் நம்பிக்கை வார்த்தைகளை பேசியிருக்கிறார். ஆனாலும் அவர்களின் ஆதங்கம் குறையவில்லை.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில் ஒரு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு 41 முறை இரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டும் என்பது கொடுமை.
