வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
உத்தர்காசி: மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது உத்தர்கண்ட் அரசு.
உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து உத்தர்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கூட்டாக அளித்த பேட்டி, மீட்பு பணிக்கான எந்திரங்கள் பழுதான நிலையிலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்படவில்லை. மீட்பு பணிகள் முற்றிலும் துரிதமாக நடைபெற்றது. மீட்பு படையினருக்கு அலுவலக அதிகாரிகளும் உதவி செய்தனர்.
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 1லட்சம் வழங்கப்படும். கடந்த 17 நாட்களாக சவாலான பணியில் ஈடுபட்ட மீட்பு படையினர் , உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சைக்கு வீடு திரும்புவர். இவ்வாறு முதல்வர் தாமி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

