Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நவ. 28, 29-ல்  விழுப்புரத்தில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, திமுக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

நவம்பர் 15-ஆம் நாள் காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான திருமாவளவன் என்னை சந்தித்தார்.

இதையும் படிக்க: வீட்டுக்குள் இறைச்சி வேண்டாம்! தம்பியைக் கொன்ற சகோதரர்கள்!

அவருடைய நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதே, அந்த விழாவில் திருமாவளவன் எம்.பி. உரையாற்றும்போது, அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். 

திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவனும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார். திராவிட மாடல் அரசிடம் அவர் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கட்சியின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

Next Post

Pa.Ranjith: "2026 தேர்தலில் களமிறங்குவோம்; நாம யாருன்னு காட்டுவோம்…" – இயக்குநர் பா.ரஞ்சித்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Pa.Ranjith: "2026 தேர்தலில் களமிறங்குவோம்; நாம யாருன்னு காட்டுவோம்…" – இயக்குநர் பா.ரஞ்சித்

Pa.Ranjith: "2026 தேர்தலில் களமிறங்குவோம்; நாம யாருன்னு காட்டுவோம்..." - இயக்குநர் பா.ரஞ்சித்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In